இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,124 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 42 ஆயிரத்து 192 ஆக உயர்ந்தது.
கேரளாவில் திருத்தியமைக்கப்பட்ட பட்டியலில் 13 மரணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர நேற்று டெல்லியில் 2, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 17 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,507 ஆக உயர்ந்தது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,977 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 2 ஆயிரத்து 714 ஆக உயர்ந்தது. தற்போது 14,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.