உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் 3வது மாதமாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனின் முக்கிய துறைமுக நகரான மரியுபோலை ரஷியா முழுமையாக கைப்பற்றியது. உக்ரைன் நாட்டின் கிழக்குப் பிராந்தியமான டான்பாஸ் பகுதியில் ரஷிய ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் தனது நட்பு நாடுகளிடம் ஆயுதங்கள் வேண்டும் என கோரியுள்ளது.
உக்ரைனின் கிழக்குப் பிராந்தியமான டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷியா தீவிர தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனின் வெளியுறவுத் துறை மந்திரி டிமிட்ரோ குலேபா, ரஷிய ராணுவம் ‘மிகவும் இரக்கமற்ற முறையில் டான்பாஸ் போர் நடந்துகொண்டிருக்கிறது. நாட்டிற்குத் தேவையான அனைத்து ஆயுதங்களும் இல்லை. நட்பு நாடுகள் எங்களுக்கு ஆயுத விநியோகத்தை விரைவு படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்