ஒரே காரில் பயணித்த ரஜினிகாந்த் – இளையராஜா – Dinaseithigal

ஒரே காரில் பயணித்த ரஜினிகாந்த் – இளையராஜா

சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்தில் அவரை சந்தித்த இசையமைப்பாளர் இளையராஜா இன்று நேரில் சந்தித்தார். அவருடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு அங்கிருந்து இளையராஜா தயாரானபோது “எங்கு செல்கிறீர்கள்?” என ரஜினிகாந்த் கேட்கவே, இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற உள்ளதாக இளையராஜா கூறியுள்ளார்.

அப்போது தானும் உடன் வருவதாக தெரிவித்த ரஜினிகாந்த், தனது காரிலேயே இளையராஜாவை ஒத்திகை நடக்கும் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்தபடி இளையராஜா தலைமையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகையை ரஜினிகாந்த் கண்டு ரசித்தார். இவர்களது சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *