ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஸ்ராத் அணிக்காக 9 ஆட்டங்களில் விளையாடி 3 அரைசதங்களுடன் 312 ரன்கள் குவித்துள்ள விருத்திமான் சஹா, எந்த மைதானத்திலும் எங்களால் சிறப்பாக ஆட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்
குஜராத் அணிக்காக நான் விளையாடுகிறேன். எனவே எனது சொந்த மைதானம் அகமதாபாத் மொதேரா ஸ்டேடியம் ஆகும். எந்த மைதானத்திலும் குஜராத் அணி சிறப்பாக விளையாடும். இந்திய அணிக்கான தேர்வு குறித்து நான் நினைக்கவில்லை. என்னை பொறுத்தவரை பேட்டிங்கில் கவனம் செலுத்துவதாகும்.
ஒவ்வொரு ஆட்டத்திலும் ரன்களை குவிக்க வேண்டும். முதல் 6 ஓரில் அதிரடியாக ஆடுவதுதான் முக்கியமானது என்று கூறியுள்ளார்.