இந்த முறை பெங்களூர் நிச்சயமாக கோப்பை வெல்லும் – சிராஜ் நம்பிக்கை – Dinaseithigal

இந்த முறை பெங்களூர் நிச்சயமாக கோப்பை வெல்லும் – சிராஜ் நம்பிக்கை

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

இந்நிலையில் பெங்களூரு அணியின் வேக பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இது குறித்து கூறுகையில்,

பிளேஆப் சுற்றுக்குள் நுழைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.”ஆர்சிபி சிறப்பாக விளையாடி பட்டத்தை வெல்லும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் மூன்று முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளோம். ஆனால் விரைவில் பட்டத்தை வெல்வோம் என உறுதியாக நம்புகிறேன்.

இது போட்டியின் முக்கியமான கட்டமாகும், நாங்கள் சிறப்பாக செயல்பட தயாராக உள்ளோம் எனக்கு நல்ல சீசன் இல்லை (13 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள்). நான் என்னை ஊக்கப்படுத்துகிறேன், மேலும் பிளே ஆப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட விரும்புகிறேன்,”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *