May 25, 2022 – Dinaseithigal

புட்டினிடம் நேரடியாக பேசுவேன், இடைத்தரகர்கள் மூலம் அல்ல: உக்ரைன் அதிபர்

தற்போது நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போருக்கு மத்தியில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நேரடியாக பேச மட்டுமே தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி புதன்கிழமை தெரிவித்தார், இடைத்தரகர்கள் மூலம் அல்ல. புடின் “உண்மையைப் புரிந்து கொண்டால்”, மோதலில் இருந்து இராஜதந்திர வழியைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று அவர் மேலும் கூறினார். உக்ரைன் தனது அனைத்து பிரதேசங்களையும் மீட்கும் வரை போராடும் என்றும் அவர் கூறினார்.

Read More

ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் முகையூர் ஊராட்சி ஒன்றியம் ஆயந்தூர் ஊராட்சியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பண்ணைக்குட்டை வெட்டுதல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அக்கிராம மக்கள் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று காலை, மாவட்ட கலெக்டர் மோகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் …

Read More

கஞ்சா பயிரிட்டு வந்த வாலிபர் கைது

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தை அடுத்த பகுதியில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு சிலர் கஞ்சா பயிரிட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அங்கு கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அந்த நிலத்தை சுற்றி வனவிலங்குகள் புகாமல் இருப்பதற்காக இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து அங்கு பதுங்கியிருந்த கணேசபுரத்தை சேர்ந்த திவாகர் (வயது 28) என்பவரை பிடித்தனர். போலீசாரை கண்டதும் …

Read More

மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேவதானப்பட்டி அருகே 55 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் பரவலாக மழை பெய்ததால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் முழு கொள்ளளவை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையில் இருந்து விவசாய தேவைக்காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாததால் அணையின் நீர்மட்டம் சீராக குறைய தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 37.50 அடியாக இருந்தது. இந்தநிலையில் தேவதானப்பட்டி …

Read More

தாக்குதலில் ஈடுபட்ட 3 பேர் கைது

வேதாரண்யம் தாலுகா நெய்விளக்கை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(வயது28). இவர் தனியார் பார்சல் கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். சம்பவத்தன்று அகஸ்தியன்பள்ளியை சேர்ந்த மாரிமுத்து என்பவருக்கு ஒரு பார்சல் வந்தது. பார்சலில் உள்ள நம்பருக்கு ஸ்ரீகாந்த் போன் செய்தார். அந்த போன் நம்பர் மாறி அகஸ்தியன்பள்ளியில் உள்ள திருமணமான ஒரு பெண்ணுக்கு சென்றது. இதுகுறித்து அந்த பெண் சிங்கப்பூரில் உள்ள தனது கணவரிடம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் தனது நண்பரிடம் விசாரிக்க கூறியுள்ளார். அப்போது அந்த இடத்திற்கு வந்த ஸ்ரீகாந்தை, அந்த பெண்ணின் கணவரின் உறவினர்கள் திருகுமரன்(29), தீபன்(20), …

Read More

பெங்களூரில் ஐபிஎல் சூதாட்ட கும்பல் முரியடிப்பு : 2 லட்சத்துக்கு மேல் பறிமுதல்

பெங்களூரு நகர காவல் துறையினர் ஐபிஎல் சூதாட்ட மோசடியை முறியடித்துள்ளதாக நகர காவல் இணை ஆணையர் (குற்றம்) ராமன் குப்தா புதன்கிழமை தெரிவித்தார். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ₹2,00,000 ரொக்கம், மொபைல் போன் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read More

பிரதமர் டெல்லி செல்வதற்கு முன்பாக பாஜக தலைவர்கள் கண்டிப்பாக சந்திப்போம்- அண்ணாமலை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:- பிரதமர் நநேர்திர மோடி அவர்கள் 31,600 கோடி மதிப்பில் மத்திய அரசின் நிறைவடைந்த முக்கியத் திட்டங்களை திறந்து வைப்பதற்காக நாளை சென்னை வருகிறார். நாளை மாலை 5.10 மணிக்கு வந்து நேரு ஸ்டேடியத்தில் ஒரே இடத்தில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று இரவு 8 மணிக்கு டெல்லி புறப்படுகிறார். 3 மணிநேர பயணத்தில் மிக முக்கியமாக தமிழகத்தில் சென்னை எழும்பூர் உள்பட 5 ரெயில்வே நிலையங்களில் மேம்படுத்துதல் பணி நடைபெறுகிறது. பிறகு, உள்கட்டமைப்பு மேம்பாட்டில் லாஜிஸ்டிக் நோடல் …

Read More

சோனியாவும், பிரியங்காவும் ப.சிதம்பரத்துக்கு ஆதரவு

பாராளுமன்ற மேல் சபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்ய டெல்லியில் ஆலோசனை நடந்து வருகிறது. தமிழகத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபைக்கு செல்ல மூத்த தலைவர்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தமிழகத்தில் இருந்து மேல்சபை எம்.பி.யாக தேர்வாக வேண்டும் என்று தீவிரமாக உள்ளார். இதற்காக அவர் சமீபத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியும், எம்.பி. பதவியை கேட்கிறார். அவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் …

Read More

முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கு 30 இளைஞர்கள் தேர்தெடுக்கப்பட்டு பயிற்சி- தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக அரசுக்கு உதவ இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்துக்காக திருச்சி பாரதிதாசன் பல்கலையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதல்-அமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். முதல்-அமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு …

Read More

வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன் மறைவுக்கு டாக்டர் ராமதாஸ் இரங்கல்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- 35 ஆண்டுகளாக சிறையில் வாடிய வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன், அவரது உடல் நல பாதிப்புக்கு சேலம் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். மாதையனை விடுவிப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம் என்று உயர்நீதிமன்றமே ஆணையிட்ட பிறகும், அவர் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதனால் சிறுக, சிறுக கொல்லப்பட்டார். மனித நேயமற்ற அரசு எந்திரம் தான் அவரது இறப்புக்கு பொறுப்பேற்க …

Read More