May 2022 – Dinaseithigal

மகாராஷ்டிராவில் தனது 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்த பெண்

மகாராஷ்டிராவின் ராய்காட்டில் 30 வயது பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாக தனது 6 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததாக போலீஸார் தெரிவித்தனர். அந்தப் பெண் உயிர் பிழைத்தார், ஆனால் அவரது 18 மாதங்கள் முதல் 10 வயது வரையிலான அனைத்து குழந்தைகளும் இறந்துவிட்டனர். உயிரிழந்த குழந்தைகளில் ஐந்து பெண்களும் அடங்குவர். கணவரின் குடும்பத்தினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அந்தப் பெண் இந்த நடவடிக்கையை எடுத்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Read More

மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கலால் வரி உயர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் பூந்தமல்லி ஒன்றிய ம.தி.மு.க. சார்பில் திருநின்றவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் கைலாசம், திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் நெமிலிச்சேரி பாபு, தீர்மா னக்குழு செயலாளர் மணிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Read More

மூஸ்வாலாவின் சடலம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டபோது பெரும் கூட்டம் கூடுகிறது,

மறைந்த பாடகர்-அரசியல்வாதியின் உடல் அவரது இறுதிச் சடங்கிற்கு முன்னதாக மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, சித்து மூஸ்வாலாவின் வீட்டிற்கு அருகில் ஏராளமான மக்கள் திரண்டனர். மூஸ்வாலாவின் ரசிகர்கள் பஞ்சாப் அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர், அவரது கொலையாளிகளுக்கு மரணம் கோரினர். மூஸ்வாலா ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

Read More

பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்காக 17 கோடியே 18 லட்சம் ஒதுக்கீடு- தமிழக அரசு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல்,கோயம்புத்தூர் சேலம் மற்றும் தர்மபுரி ஆகிய 11 மாவட்டங்களில் வாழும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தடுப்பணை கட்டுதல், பள்ளிகள் பராமரிப்பு, மேம்படுத்துதல் போன்ற உட்கட்டமைப்பு பணிகள் 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனை செயல்படுத்தும் வகையில், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி, அத்திப்பாடி கிராமப்பகுதியில் …

Read More

தி.மு.க. ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது- ஓ. பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. ஆட்சியில் ஒழுக்கமின்மை மேலோங்கி நிற்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தி.மு.க.வினருக்கு பயந்து கொண்டிருந்த அரசு அதிகாரிகள் இனி சக ஊழியர்களுக்கும் அஞ்சி நடக்க வேண்டிய நிலை, தற்போது தமிழ்நாட்டில் உருவாகியுள்ளது. ஆட்சி அதிகாரத்தில் தி.மு.க.வினரின் தலையீடு பரவலாக இருப்பதும், அவர்களோடு சில அரசு ஊழியர்கள் கைகோர்த்து இருப்பதும்தான் இது போன்ற செயலுக்கு காரணம் என்று அரசு ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் நிலை …

Read More

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: போபண்ணா – மேத்வி மிட்டெல்கூப் ஜோடி அரை இறுதிக்குள் நுழைந்தது

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – மேத்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி 4-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் லாய்டு கிளாஸ்பூல் – பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா இணையை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.

Read More

பாரதிய ஜனதா கட்சியினர் கோட்டை நோக்கி பேரணி- போலீசார் குவிப்பு

தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியினர் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று கோட்டை நோக்கி பேரணி செல்ல திட்டமிட்டு எழும்பூரில் திரண்டனர். எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் கூடிய பா.ஜனதாவினர் தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். அவர்கள் கோட்டை நோக்கி தடையை மீறி பேரணியாக செல்ல முடியாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் திரண்டு அங்கிருந்து கோட்டை நோக்கி செல்வதற்கு பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டிருந்த …

Read More

வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் குறித்த தகவல்

தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வருமாறு:- திமுக வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களுடன் அளித்த பிரமாண பத்திரத்தில், அசையும், அசையா சொத்துக்களின் விவரங்களை அளித்து உள்ளனர். தஞ்சையைச் சேர்ந்த எஸ்.கல்யாணசுந்தரத்தின் பெயரில் ரூ.43.46 லட்சம் மதிப்பு அசையும் சொத்துக்கள். அவரது இரு மனைவிகள் பெயரில், 113 சவரன் தங்கம், வைர நகைகள் உட்பட ரூ.67.76 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துக்கள். கல்யாண சுந்தரம் பெயரில் ரூ.3.46 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள், மனைவிகள் பெயரில் ரூ. 1.39 கோடி மதிப்புள்ள அசையா …

Read More

1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு- இயக்குனர் செந்தாமரை கண்ணன்

தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பரவி உள்ளது. இதன் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, …

Read More

தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு மின்சார ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே

தெற்கு ரெயில்வே, சென்னை கோட்டம் சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தாம்பரம் பணிமனையில் நாளை (1-ந் தேதி) காலை 9.55 முதல் மதியம் 1.55 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:- சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9.02 மணி, 9.30, 10.12, 10.56, 11.50, 12.20 மணிக்கு செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு 9.30 மணிக்கு செல்லும் மின்சார …

Read More