கொரோனா வைரஸ் : ஜெர்மனியில் ஒரே நாளில் 203,136 பேர் பாதிப்பு – Dinaseithigal

கொரோனா வைரஸ் : ஜெர்மனியில் ஒரே நாளில் 203,136 பேர் பாதிப்பு

ஜெர்மனியில் ஒரே நாளில் மேலும் 203,136 பேருக்கு கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேர இடைவேளையில் 188 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர். தினசரி தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டியுள்ள வேளையில், அந்நாட்டு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்குவது குறித்து ஜெர்மானிய அரசாங்கம் விவாதித்து வருகிறது. ஜெர்மனியின் மக்கள் தொகையில் 75 விழுக்காட்டினருக்குக் குறைந்தது ஒரு முறை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இருப்பினும், மேற்கு ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி ஆகியவற்றை விட அந்த விகிதம் குறைவானது என்று குறைகூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *