ஜப்பானில் அதிவேகமாகப் பரவும் கிருமி தொற்று – மருத்துவத் துறைக்கு நெருக்கடி – Dinaseithigal

ஜப்பானில் அதிவேகமாகப் பரவும் கிருமி தொற்று – மருத்துவத் துறைக்கு நெருக்கடி

ஜப்பானில் கிருமித்தொற்று வேகமாய்ப் பரவி வருவதால் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. COVID-19 கிருமித்தொற்றுத் தொடங்கியது முதல் இப்போதுதான் முதன்முறையாக ஒரு நாளில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 71 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் மட்டும் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒசாக்காவில், PCR பரிசோதனைக் கருவிகளுக்குப்  பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  அது மருத்துவத்துறைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாக ஜப்பானிய அரசாங்கம் கூறியது. போதிய மருத்துவச் சாதனங்கள் இருப்பதை உறுதிசெய்ய உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அது குறிப்பிட்டது. ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா கிருமித்தொற்றுப் பரவுவதைக்  கட்டுப்படுத்த booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *