போடா போடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். கதாநாயகி மட்டுமல்ல, வில்லி வேடத்திலும் நடிக்கிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. தற்போது வரலட்சுமியிடம் கன்னித்தீவு, காட்டேரி, பாம்பன், பிறந்தநாள் பராசக்தி, வண்ணங்கள் ஆகிய படங்கள் உள்ளன. சமூக வலைதளத்தில் சுறுசுறுப்பாக செயல்படும் நடிகை வரலட்சுமி, சமூகம் தொடர்பான விஷயங்களையும் தனது சமீபத்திய புகைப்படங்கள் அல்லது வீடியோக்களையும் பதிவிடுவார். அந்த வகையில் தற்போது தலைகீழாக தொங்கி யோகா செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதோ அந்த வீடியோ..