ஜனவரி 27 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் – Dinaseithigal

ஜனவரி 27 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

98 – திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது.

1302 – கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார்.

1343 – திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும்,  பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார்.

1606 – வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் இவர் தூக்கிலிடப்பட்டார்.

1695 – உதுமானியப் பேரரசர் இரண்டாம் அகமது இறந்ததை அடுத்து இரண்டாம் முஸ்தபா பேரரசரானார்.

1785 – அமெரிக்காவின் முதலாவது பொதுப் பல்கலைக்கழகம் ஜோர்ஜியா பல்கலைக்கழகம்  ஆரம்பிக்கப்பட்டது.

1820 – மிகைல் லசாரொவ் தலைமையிலான உருசியக் குழு அந்தாட்டிக்கா கண்டத்தைக் கண்டுபிடித்தது.

1825 – ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் இந்தியப் பிராந்தியத்தை (இன்றைய ஓக்லகோமா) அங்கீகரித்தது. இதன் மூலம் கிழக்கிந்தியர்களை கட்டாயமாக “கண்ணீர்த் தடங்களில்” இடம்பெயர வைக்க முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *