தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு…! – Dinaseithigal

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைவு…!

 தமிழகத்தில் இன்று 28 ஆயிரத்து 515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று 29 ஆயிரத்து 976 பேர் பாதிக்கப்பட்டதை விட குறைவு. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்து 52 ஆயிரத்து 751 ஆக அதிகரித்துள்ளது.இன்று 28 ஆயிரத்து 620 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 1 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 13 ஆயிரத்து 534 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தாக்குதலுக்கு இன்று 53 பேர் பலியாகியுள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 412 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *