வன்முறையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது வழக்கு – Dinaseithigal

வன்முறையில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் மீது வழக்கு

ரெயில்வே துறை நடத்திய சிபிடி -2 தேர்வில் முறைகேடு நடந்ததால் தேர்வை ரத்து செய்ய கோரி பீகார் மாநிலம் கயாவில்  தேர்வர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது  கயா ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலின் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். ரெயில் பெட்டியில்  தீப்பற்றி கரும்புகை வெளியேறிய காட்சிகள் பதைபதைக்க வைக்கப்பட்டுள்ளன. நிகழ்விடத்திற்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரெயில்வே என்.டி.பி.சி தேர்வை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தேர்வு எழுதியவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவது கட்டத் தேர்வு என்பது ஏமாற்று வேலை எனக் குற்றம் சாட்டப்பட்ட தேர்வர்கள், 2019 ஆம் ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்டத் தேர்வு எனக்குறிப்பிடவில்லை எனவும் தங்களின் எதிர்காலத்தோடு அரசு விளையாடுவதாகவும். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள ரெயில்வே தேர்வு வாரியம்,  தேர்வு குறித்த அறிவிப்பாணையில் இரண்டு கட்டத் தேர்வுக்கு முறைப்படி குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே,  போராட்டம் காரணமாக தேர்வுகளை நிறுத்தி  வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *