நாட்டில் பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. தொற்று பரவல் தினம் தினம் காட்டுத்தீ போல அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே பாதிப்பால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தனது டுவிட்டரில், “இன்று நான் அவருக்கு பரிசோதனை செய்துள்ளேன். அதில் எனக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அனைவரையும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.
