கேரளாவில் தினசரி பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது .இன்றைய பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 51,739 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் பாதிப்பில் இருந்து இன்று 42ஆயிரத்தில் 653 பேர் குணமடைந்துள்ளனர்.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3,09,489 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
