சத்தீஸ்கரின் மகாசமுந்த் மாவட்டத்தில் பழங்குடியின பள்ளி மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. அந்த விடுதியில் நேற்று குடியரசு தினம் விழா கொண்டாடப்பட்டது. விடுதி வளாகத்தில் மிகப்பெரிய உயரத்தில் இரும்பாலான கொடிகம்பத்தில் காலை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
அதன் பின்னர் மாலை தேசியக்கொடியை கொடிகம்பத்தில் இருந்து கழற்றி வைக்கும் படி விடுதி காப்பாளர் மாணவிகளான கிரண் திவா மற்றும் காஜல் ஆகியோரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து, இரு மாணவிகளும் கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த தேசியக்கொடியை இறக்க முயற்சித்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்த கொடிக்கம்பம் அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது சாய்ந்தது. இதனால், இரும்பாலான கொடிக்கம்பம் முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
