சென்னை:
திமுக மருத்துவர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டாக்டர் கனிமொழி சோமுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, வீட்டில் அவர் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனாவுக்கான சிகிச்சை முறைகளை பின்பற்றி வருகிறார். மேலும், சமீபத்தில் தன்னை சந்தித்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.