மேலூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி – Dinaseithigal

மேலூர் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

மேலூர்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த செய்யதுஅலி மகன் காதர்மீரான் (வயது30). இவர் சென்னையில் இருந்து மோட்டார்சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். இன்று காலை மதுரை மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி 4 வழிச்சாலை சந்திப்பில் வந்தபோது எதிர்பாராவிதமாக சாலையோர தடுப்பில் மோட்டார்சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த காதர்மீரான் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *