விருதுநகர்
ராஜபாளையம் அருகே உள்ள கீழராஜகுலராமன் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்தா நதியை சேர்ந்த ஜான் (வயது 45) என்பவர் தனது பெட்டிக்கடையில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 133 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்து ஜானை கைது செய்தனர்.