கடையநல்லூர் அருகே வீட்டில் மதுபதுக்கி விற்றவர் கைது – Dinaseithigal

கடையநல்லூர் அருகே வீட்டில் மதுபதுக்கி விற்றவர் கைது

தென்காசி:

கடையநல்லூர் பகுதியில், ஒரு வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பகுதியில் உள்ள நடராஜன் (வயது 39) என்பவருடைய வீட்டில் ஏராளமான மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசார் நடராஜனை கைது செய்தனர். அங்கு இருந்த 227 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *