டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம் – Dinaseithigal

டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்ட ஏர் இந்தியா நிறுவனம்

ஏர் இந்தியா விமான நிறுவனம் வாங்க டாடா குழுமம் விருப்பம் தெரிவித்து ஏல விவரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. டாடா குழுமம் அளித்த ஏல விவரங்களை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர் இந்தியாவை டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியது. இதையடுத்து, ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முழுமையான டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஏர் இந்தியாவை டாடா குழுமத்திடம் ஒப்படைக்கும் பணிகள் முழுவதும் இன்று நிறைவடைந்தது. ஏர் இந்தியாவின் பங்குகள் டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் முழுவதும் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு முன்னதாக இன்று நண்பகலில் டாடா குழுமத்தின் தலைவர் சந்திரசேகரனை பிரதமர் மோடி நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு ஏர் இந்தியா முழுவதும் டாடா குழுமத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *