தெற்கு பகுதியில் பிரபலமான மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 23 நபர்களுக்கு தொற்றுறுதி – Dinaseithigal

தெற்கு பகுதியில் பிரபலமான மருத்துவமனையில் மருத்துவர்கள் உட்பட 23 நபர்களுக்கு தொற்றுறுதி

இலங்கையில் ஹோமாகம ஆதார மருத்துவமனையில் பணிபுரியும் 23 ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் டொக்டர் ஜனித் ஹெட்டியாராச்சி கூறியுள்ளார். அதன்பிரகாரம் , மூன்று டாக்டர்கள், பதினொரு செவிலியர்கள் மற்றும் இளநிலை ஊழியர்கள் ஒன்பது பேர் இப்படி கொரோனா தொற்றுக்கு இலக்காகி உள்ளனர். அதே சமயம் , ஹோமாகம ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். இதன் பிரகாரம் , இரண்டு விடுதிகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்காக 75 படுக்கைகள் உள்ளன, ஆனால் தற்போது 81 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *