உத்தரகண்ட் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் கட்சிக்கு எதிராக செயல்படுவதால் 6 ஆண்டுகள் கட்சியிலிருந்து நீக்கி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாநில பொறுப்பாளர் தேவேந்திர யாதவ் உத்தரவிட்டார். இந்நிலையில், காங்கிரசிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்யாய் பாஜகவில் இணைந்தார். கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உத்தரகாண்ட் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிஷோர் உபாத்யாய் பாஜகவில் இணைந்தது உத்தரகாண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
