பிரபல தனியார் மருத்துவமனையில் இலங்கை பிரதமருக்கு அறுவை சிகிச்சை – Dinaseithigal

பிரபல தனியார் மருத்துவமனையில் இலங்கை பிரதமருக்கு அறுவை சிகிச்சை

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கொழும்பில் உள்ள முன்னணி தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமரின் வாயில் சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. பல காலமாக பிரதமரின் சிறப்பு மருத்துவராக செயற்பட்டு வரும் மருத்துவர் நரேந்திர பிந்தும் இந்த அறுவை சிகிச்சையை நடத்தியுள்ளார் . ஐக்கிய இராச்சியத்தில் வசித்துவரும் மருத்துவர் நரேந்திர பிந், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொள்ள, முன்னதாக திட்டமிடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகின்றது. ஆயினும் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக பிரதமர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *