இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – Dinaseithigal

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் தில்ருவான் பெரேரா அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் மூலம் இந்த தகவலை அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட விரும்புவதாக கூறியுள்ளார். 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆன 39 வயதான பெரேரா 43 டெஸ்டுகளில் விளையாடி 161 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும், 7 அரைசதம் உட்பட 1,303 ரன்களும் எடுத்துள்ளனர். மேலும் 13 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *