ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு – Dinaseithigal

ஆசிய கால்பந்து கூட்டமைப்பு மீது இந்திய பயிற்சியாளர் பரபரப்பு குற்றச்சாட்டு

ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் போது இந்திய வீராங்கனைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்று பயிற்சியாளர் குற்றம் சாட்டியுள்ளார். 12 அணிகள் இடையிலான பெண்களுக்கான 20-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி மராட்டியத்தில் நடந்து வருகிறது. இதில் சீன தைபேவுக்கு எதிரான ஆட்டத்தில் மோதுவதற்கு முன்பாக இந்திய அணியில் 12 வீராங்கனைகள் கொரோனாவில் சிக்கினர். 2 வீராங்கனைகள் காயத்தால் அவதிப்பட்டனர். இதையடுத்து களம் இறங்க போதுமான வீராங்கனைகள் இல்லாததால் இந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டதுடன் போட்டியில் இருந்தும் இந்திய அணி வெளியேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *