கொரோனா வைரஸ் : தென் கொரியாவில் இன்று 14 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பேர் பாதிப்பு
தென் கொரியாவில் இன்று புதிதாக 14 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக அங்கு, முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகமானோருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்படுகிறது. சென்ற வாரம் அங்கு நாள்தோறும் புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டோர் விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்கு குறைவாய் 3,800 ஆக இருந்தது. சுகாதாரப் பராமரிப்புக் கட்டமைப்பின் நெருக்கடியைத் தவிர்க்க, பரிசோதனையையும், தனிமைப்படுத்தும் வழிமுறைகளையும் அதிகாரிகள் மாற்றியமைத்துள்ளனர்.
Read More