booster தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன – Dinaseithigal

booster தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன

மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டியில் COVID-19 நோய்த்தொற்றுக்கான booster தடுப்பூசிகள் போடும் பணிகள் தொடங்கப்படவுள்ளன. அங்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு booster தடுப்பூசிகள் போடப்படும். மெக்சிகோ கடந்த வாரம் booster தடுப்பூசிகள் போடுவது குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. எளிதில் பாதிக்கப்படக்கூடிய மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

AstraZeneca தடுப்புமருந்தை booster மருந்தாக மெக்சிகோ பயன்படுத்துகிறது. முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதங்களுக்குப் பிறகு booster தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். COVID-19 நோய்த்தொற்றால் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோவும் ஒன்று. அங்கு இதுவரை சுமார் 4 மில்லியன் பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 300,000 பேர் மாண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *