வெண்டைக்காய் தரும் நன்மைகள் என்ன? – Dinaseithigal

வெண்டைக்காய் தரும் நன்மைகள் என்ன?

கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் ஆசிட் வெண்டைக்காயில் இருக்கிறது. எனவே கர்ப்பிணிகள் அதன் வழவழப்பு திரவம் குறையாமல் வாரம் 2 முறையேனும் சமைத்து சாப்பிடலாம்.

சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய், அனீமியா, பார்வைக் குறைபாடு, வயிற்றுப் புண் என பல நோய் , உடல் உபாதைகளுக்கும் வெண்டைக்காய் சிறந்த துணையாக உள்ளது.

சிறுநீர் நன்கு பிரியவும், உடலுக்குக் குளிர்ச்சியைத் தரவும், தோல் வறட்சியை நீக்கவும் உடம்மைப் பளபளப்பாக மாற்றவும் அரிய மருந்தாகவும் வெண்டைக்காய் திகழ்கின்றன.

இது குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும். மூளை வளர்ச்சிக்கு ஏற்றது. எனவே, புத்திக்கூர்மை அதிகரிக்க அனைத்து வயதினரும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் இக்காயை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *