செரிமானத்தை அதிகரிக்கும் வெதுவெதுப்பான நீர் – Dinaseithigal

செரிமானத்தை அதிகரிக்கும் வெதுவெதுப்பான நீர்

சாப்பிட்ட பின் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவதால் உணவு எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கேடு விளைவிக்கும் கெட்ட கொழுப்புகளை தடுக்கிறது. இளஞ்சூடாய் தண்ணீர் பருகுவது, புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கிறது என்றுகூட தெரிவிக்கப்படுகிறது.

சிலருக்கு ‘ஜில்’லென்று பிரிட்ஜில் வைத்த தண்ணீர்தான் குடிக்கப் பிடிக்கும். ஆனால், குளிர்ந்த நீர் அருந்துவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும்.

சாப்பிட்டு முடித்தபின்னர் ‘ஜில்’லென்று குளிர்த்தியான தண்ணீர் அருந்தினால், நம் உணவில் உள்ள எண்ணெய்த் துகள்கள் கெட்டியாகிவிடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சினை ஏற்படும். அதோடு, நமது உடலில் சேரும் கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *