நடிகை மீது மோட்டார் சைக்கிளால் மோதிய மர்மநபர் – Dinaseithigal

நடிகை மீது மோட்டார் சைக்கிளால் மோதிய மர்மநபர்

பிரபல மேற்கு வங்க நடிகை பிரியங்கா சர்காரும், நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தியும் கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் நடந்த வெப் தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தனர்.

அப்போது படப்பிடிப்பு தளத்தில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி வந்த மர்மநபர் ஒருவர், படப்பிடிப்பு கருவிகளை தள்ளி விட்டு நடிகை பிரியங்கா சர்கார், நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி மீது பயங்கரமாக மோதியது. இருவரும் கீழே விழுந்தனர். அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இருவரையும் மோதி தள்ளிய மர்ம ஆசாமி நிற்காமல் வேகமாக சென்று விட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரியங்கா மற்றும் அர்ஜூன் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். எலும்பில் கீறல் இருந்ததால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அர்ஜுன் சக்கரவர்த்தி லேசான காயத்தோடு தப்பினார். கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து மோதியவரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *