டெல்லியில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று – Dinaseithigal

டெல்லியில் புதிதாக 51 பேருக்கு கொரோனா தொற்று

டெல்லியில் இன்று மேலும் 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,41,449 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,099 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனால் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 14,15,974 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 376 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *