இங்கிலாந்து தொடரில் ஏன் அஸ்வினுக்கு வாய்ப்பு இல்லை – பாகிஸ்தான் வீரர் கேள்வி – Dinaseithigal

இங்கிலாந்து தொடரில் ஏன் அஸ்வினுக்கு வாய்ப்பு இல்லை – பாகிஸ்தான் வீரர் கேள்வி

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவரான ஆர்.அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்து வீசி 14 விக்கெட் கைப்பற்றி தொடர் நாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் அஸ்வின் 81 டெஸ்டில் விளையாடி 427 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். ஆனால் கடைசியான இங்கிலாந்து பயணத்தின்போது ஒரு டெஸ்டில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை..

இது குறித்து அணியின் கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பதில் அளிக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வந்தனர். அந்த வகயைில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன்  சல்மான் பட் அஸ்வின், போன்ற மேட்ச் வின்னரை இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்காததை இன்னும் நம்ப முடியவில்லை. அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீரர்.

அவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்பது பற்றி அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி ஆகியோர் மட்டுமே பதில் அளிக்க முடியும். அவர்கள் இதுகுறித்து பதில் அளிக்க வேண்டும். அணிக்கு மீண்டும் திரும்பிய அஸ்வின் தனது திறமையை நிரூபித்தார். தனது முக்கியத்துவத்தை அவர் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தினார் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *