மசாஜ் சென்டரில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது – Dinaseithigal

மசாஜ் சென்டரில் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாலிபர் கைது

திருப்பூர் குமார் நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடைபெறுவதாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மசாஜ் சென்டரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு அறையில் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.இதனையடுத்து அந்தப்பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். மசாஜ் சென்டர் உரிமையாளர் திருப்பூர் மங்கலம் ரோடு செங்குந்தபுரத்தை சேர்ந்த சோணமுத்து (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *