உளுந்தஞ்சோறு செய்வது எப்படி? – Dinaseithigal

உளுந்தஞ்சோறு செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

தோல் உளுந்து-ஒருகப்
இட்லி அரிசி-2கப்
தேங்காய்-அரைமூடி
பூண்டு-2
ஜீரகம்-1ஸ்பூன்
வெந்தயம்-1ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு

செய்முறை:

வெறும் வாணலியில் வெந்தயம் மற்றும் ஜீரகத்தை வருத்துகொள்ளவும். பூண்டை உரித்து வைத்துகொள்ளவும்.தேங்காயை துருவிவைத்துகொள்ளவும். அதே வாணலியில் உளுந்தையும் லேசாக வருத்துகொள்ளவும்.அரிசியை இரண்டு தடவை கழுவி மூன்றாவது தடவை உளுந்தையும் சேர்த்து கழுவவும்.

அரிசி,உளுந்தை குக்கரில் போட்டு 9 கப் தண்ணீர் வைக்கவும்.வருத்து வைத்த ஜீரகம்,வெந்தயம்,மற்றும் பூண்டை அதில் போடவும்.உப்பு போட்டு கிளரவும். அடுப்பில் குக்கரை வைத்து 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.குக்கரில் ஆவி போன உடன் மூடியை திறந்து தேங்காய் துருவலை போட்டு கிளறி பரிமாரவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *