November 26, 2021 – Dinaseithigal

சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவர் கைது

சங்கராபுரம்: சங்கராபுரம் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொசப்பாடி பகுதியில் சாராயம் விற்றதாக அதே ஊரை சேர்ந்த கண்ணன்(வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

Read More

தென்னாப்பிரிக்கப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் ஐரோப்பிய நாடுகள்

தென்னாப்பிரிக்காவில் புதுவகை COVID-19 கிருமி அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து ஐரோப்பிய நாடுகள் பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் தென்னாப்பிரிக்காவில் இருந்து வருபவர்களுக்குத் தடை விதித்துள்ளன. உருமாற்றம் பெற்ற புதுவகை COVID-19 கிருமி நாட்டிற்குள் வந்துவிடாமல் இருக்க அந்த நடவடிக்கைகளை எடுப்பதாக அந்நாடுகள் கூறின. ஐரோப்பிய ஒன்றியமும் தென்னாப்பிரிக்காவுடனான பயணங்களைத் தடைசெய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா மற்றும் அதன் வட்டார நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகள் இன்று இரவு முதல் நாட்டிற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. போட்ஸ்வானா, எஸ்வாட்டினி, …

Read More

ஆலங்குளத்தில் நூதன முறையில் மோட்டார் சைக்கிள் திருட்டு – போலீசார் விசாரணை

ஆலங்குளம்: ஆலங்குளம் புரட்சி நகரை சேர்ந்தவர் கந்தன் மகன் ரமேஷ் (வயது 33). இவர் ஆலங்குளம் – தென்காசி சாலையில் இரு சக்கர வாகனம் விற்கும் கடை வைத்துள்ளார். நேற்று மாலை அந்த கடைக்கு 40 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் மோட்டார்சைக்கிளை ஓட்டி பார்த்துவிட்டு வருவதாக ஆலங்குளம் பஸ் நிலையம் நோக்கி சென்றவர் நீண்ட நேரமாகியும் கடைக்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரமேஷ் ஆலங்குளத்தில் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளார். இதுகுறித்து அவர் ஆலங்குளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் பெட்ரோல் பங்க் …

Read More

கல்பாக்கம் அருகே விபத்தில் தொழிலாளி பலி

கல்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46). இவர் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மகள் ரிக்சிதா (6). நேற்று முன்தினம் ரமேஷ் மோட்டார் சைக்கிளில் தனது மகளை கல்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் நின்றுகொண்டிருந்த வேன் கதவை திடீரென திறந்துள்ளார். எதிர்பாராதவிதமாக ரமேஷ் வந்த மோட்டார் சைக்கிள் அந்த கதவில் மோதியது. இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் அவரது மகள் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். …

Read More

திருச்சி அருகே வாலிபர் தற்கொலை

திருச்சி திருவானைக் காவல் கீழகொண்டயம் பேட்டை, குமரன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). இவரது மனைவி லட்சுமி (32). கொரோனா காலகட்டம் காரணமாக அவருக்கு சரியான வேலை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் மனமுடைந்த ரமேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடலை கைப்பற்றிய ஸ்ரீரங்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

திருச்சி அருகே முதியவர் தற்கொலை

திருச்சி: திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்த ராமசாமி (வயது 60). குடிப்பழக்கம் உடைய இவர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அவர் மனைவி கோபித்துக் கொண்டு செல்லவே, மனம் உடைந்த ராமசாமி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலைகைப் பற்றிய செ‌ஷன்ஸ்கோர்ட்டு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More

வேலூரில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூர்: வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்து மத்திய தொழிற் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். சங்கர் இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Read More

திருத்தணி அருகே விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பலி

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்த நித்யானந்தா(வயது 38). இவர் திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அதேபோல் திருத்தணி அருகே முருகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன்(40). இவர் முருகம்பட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்த 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டது. இந்த விபத்தில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்களில் நித்யானந்தா திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி …

Read More

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Read More

திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 56). விவசாயி. கடந்த 24-ந்தேதியன்று சந்திரசேகர் மாடுகளுக்கு வைக்கோல் எடுக்க சென்றார். வைக்கோல் போரில் கை வைத்து எடுக்கும்போது அதன் உள்ளே இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More