பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் பலி – Dinaseithigal

பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் பலி

நவம்பர் 25 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம், டெப்ட்ஃபோர்ட் நகரில் வூல்வேர்த் கடைத்தொகுதியில் ஜேர்மனிய விமானங்கள் ஏவுகணை வீசியதில் 160 பேர் கொல்லப்பட்டனர்.

1947 – நியூசிலாந்து வெஸ்ட்மின்ஸ்டர் சட்டத்தை ஏற்றுக் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டது.

1950 – ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கில் 22 மாநிலங்களைத் தாக்கிய சூறாவளியினால் 353 பேர் உயிரிழந்தனர்.

1960 – டொமினிக்கன் குடியரசின் போராளிகள் மிராபல் சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

1973 – கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொசு இராணுவப் புரட்சியை அடுத்து பதவி இழந்தார்.

1975 – சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1977 – பிலிப்பீன்சின் முன்னாள் மேலவை உறுப்பினர் பெனீனோ அக்கீனோவிற்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது. இவர் பின்னர் 1983 இல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1981 – ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு  தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.

1987 – பிலிப்பீன்சில் நீனா என்ற சூறாவளி தாக்கியதில் 1,036 பேர் உயிரிழந்தனர்.

1992 – செக்கோசிலோவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக 1993 சனவரி 1 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.

1996 – அமெரிக்காவின் நடுப்பகுதியை பனிக்கட்டைச் சூறாவளி தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

2000 – அசர்பைஜான் தலைநகர் பக்கூ நகரில் 7.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

2006 – சீனாவின் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட நிலக்கரிச் சுரங்க விபத்தில் 53 பேர் கொல்லப்பட்டனர்.

2008 – இலங்கையின் வடக்குப் பகுதியை நிசா புயல் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர், 90,000 பேர் இடம்பெயர்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *