சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் : பெரும் சேதம் – Dinaseithigal

சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் : பெரும் சேதம்

நவம்பர் 25 : இன்றைய தினத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

1833 – சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம், மற்றும் ஆழிப்பேரலை ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1839 – இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.

1905 – டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் “ஏழாம் ஆக்கோன்” என்ற பெயரில் நோர்வேயின் மன்னனாக முடிசூடினான்.

1917 – முதலாம் உலகப் போர்: செருமனியப் படை மொசாம்பிக், தன்சானியா எல்லையில் போர்த்துக்கீச  இராணுவத்தைத் தோற்கடித்தது.

1926 – ஐக்கிய அமெரிக்காவின் ஆர்கன்சஸ் மாநிலத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 76 பேர் உயிரிழந்து  பலர் காயமுற்றனர்.

1936 – சப்பானும், செருமனியும் சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பெர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.

1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியாவின் ‘பர்காம் என்ற கப்பல் செருமனியால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *