நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம் – Dinaseithigal

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் : காங்கிரஸ் ஆலோசனைக்கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர்  சோனியாகாந்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், குளிர்கால கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

முதல் நாளிலேயே வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும்  ஆதார விலைக்கு தனிச்சட்டம், கொரோனா இழப்பீடு உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *