ஐரோப்பிய நாடுகளின் இக்கட்டான நிலைக்கு காரணம் சொல்லும் பிரபல தடுப்பூசி நிறுவனர் – Dinaseithigal

ஐரோப்பிய நாடுகளின் இக்கட்டான நிலைக்கு காரணம் சொல்லும் பிரபல தடுப்பூசி நிறுவனர்

சமீப காலமாக கொரோனா பரவல் மற்றும் அதிக உயிரிழப்பால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட காரணம் இது தான் என ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி நிறுவனர் வெளிப்படையாக கூறியுள்ளார் .ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சொரியட் இது குறித்து பேசுகையில், ஐரோப்பிய நாடுகள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை விடுத்து பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் பின்னால் போயிருக்கிறார்கள். இதில் பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் ஆஸ்ட்ராசெனகா நீண்ட நாள் பாதுகாப்பை கொடுக்கிறது என்பது பல கட்டங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செல்களை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி மொத்தமாக சேதப்படுத்தி நீக்கி விடுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் பிடியில் இருந்து பிரிட்டன் விரைவாக விடுவித்துக் கொண்டுள்ளது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் வெற்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *