இப்போது உலக சுகாதார நிறுவனம் விடுக்கும் எச்சரிக்கை தகவல் – Dinaseithigal

இப்போது உலக சுகாதார நிறுவனம் விடுக்கும் எச்சரிக்கை தகவல்

ஐரோப்பாவில் 2022 ம் ஆண்டின் முதல் காலாண்டு காலத்தில் கொரோனா தொற்றால் மேலும் லட்சக்கணக்கான உயிரிழப்புகள் பதிவாகும் என உலக சுகாதார நிறுவனம் புதிய எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் புத்தம் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதை அடுத்து மருத்துவமனைகள் அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், அடுத்து தற்காலிக கொரோனா மருத்துவமனைகள் இயங்க தொடங்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றுப் பரவல் வீழ்ச்சி அடையாத பட்சத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலந்து நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது. இதனிடையே, கடைசியாக கடந்த 24 மணிநேரத்தில் 28 ஆயிரத்து 380 பேர் புதிததாக கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 460 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகி கொண்டுள்ளன .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *