ஐபோன் பயன்பாட்டாளர்களை இலக்கு வைத்து சதி வேலையை அரங்கேற்றிய இஸ்ரேல் சாப்ட்வேர் நிறுவனம் – Dinaseithigal

ஐபோன் பயன்பாட்டாளர்களை இலக்கு வைத்து சதி வேலையை அரங்கேற்றிய இஸ்ரேல் சாப்ட்வேர் நிறுவனம்

இப்போது உளவு மென்பொருளான பெகாசஸின் தயாரிப்பு நிறுவனமான என்.எஸ்.ஓ நிறுவனத்தின் மீது ஐபோன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் வழக்கு பதிந்துள்ளது . தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தனது செயலிகளை ஐபோன்களில் சட்டவிரோதமாக நிறுவுவதற்கு தடைவிதிக்க வேண்டும். தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈடாக 75 ஆயிரம் அமெரிக்க டாலர்களை அளிக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து , தங்களின் 165 கோடி உபகரணங்களில் ஐபோன்கள் மட்டும் 100 கோடி எண்ணிக்கையில் உள்ளன. இதனால் தங்களின் வாடிக்கையாளர்களை குறிவைத்து என் எஸ் ஓ பெரும் சதி வேலை நடத்தியிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *