சுவையான பூண்டு சாதம் செய்வது எப்படி? – Dinaseithigal

சுவையான பூண்டு சாதம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

சாதம் – 2 கப்
பூண்டு – 15 பல்
காய்ந்த மிளகாய் – 2
தனியா – 1 ஸ்பூன்
கடலை பருப்பு – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை -சிறிதளளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் 1 ஸ்பூன் விட்டு அதில் கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு , தனியா , மிளகாய் ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுக்கவும் .

கடைசியில் 4 அல்லது 5 பூண்டு பற்களைப் போட்டு சற்று வதக்கி எடுத்து ஆற விடவும் .

வறுத்த அனைத்தையும் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும் .

அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் மீதமுள்ள பூண்டுப் பற்களைப் போட்டு சிவக்க வதக்கி எடுத்து , தனியாக வைத்துக் கொள்ளவும் .

அதே எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்க ஆரம்பித்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

சாதம் மற்றும் பொடித்து வைத்துள்ள பொடி , உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும்.

கடைசியில் வதக்கி வைத்துள்ளப் பூண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும் . ரொம்ப சுவையான பூண்டு சாதம் ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *