சுயமாக திருமணம் செய்து கொண்ட பிரேசில் நாட்டு மாடல் அழகி – Dinaseithigal

சுயமாக திருமணம் செய்து கொண்ட பிரேசில் நாட்டு மாடல் அழகி

பிரேசிலை சேர்ந்த மொடலிங் அழகியான கிரிஸ் கலேரா முந்தைய காலங்களில் ஏற்பட்ட காதல் முறிவுகளால் விரக்தியடைந்து இனி தனியாக வாழலாம் என தன்னைத் தானே திருமணம் செய்யும் முடிவை மேற்கொண்டிருந்தார் . அதன்பிரகாரம் கடந்த செப்டம்பர் மாதம் கிரிஸ் கேலராவின் திருமணம் பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்றது. அப்போது கிரிஸ் கலராவின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் .இந்நிலையில் திருமணம் முடிந்து 90 நாட்களே ஆன நிலையில், இப்போது தன்னைத் தானே விவாகரத்து பண்ணி கொள்வதாக அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *