இனி தமிழ் மக்களுக்கு சாதகமாக கனடா அரசு செயல்படுமா ? – Dinaseithigal

இனி தமிழ் மக்களுக்கு சாதகமாக கனடா அரசு செயல்படுமா ?

இப்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கி கொடுக்கப்பட்டுள்ளது. சமீபத்திய கனடாவுக்கான விஜயத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோரால் இந்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் கனேடிய நாடாளுமன்றுக்கு நேற்று நேரடியாக விஜயம் செய்தபோது அங்கு 15 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு, அடக்குமுறைகள், காணி, வளச் சுரண்டல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *