கொரோனா தொற்றி மேலும் 23 பேர் உயிரிழப்பு – Dinaseithigal

கொரோனா தொற்றி மேலும் 23 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா தொற்றால் 23 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சகத்தின் தொற்று நோயியல் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. இதையடுத்து நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,205 ஆக அதிகரித்துள்ளது. இதில் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 12 பெண்களும் 11 ஆண்களும் அடங்குவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் , கொரோனா தொற்றுறுதியான மேலும் 518 பேர் இப்போது இனம் காணப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *