நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய வார்த்தையால் சபையில் நிலவிய குழப்பம் – Dinaseithigal

நாடாளுமன்ற உறுப்பினர் பேசிய வார்த்தையால் சபையில் நிலவிய குழப்பம்

இலங்கையின் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ”தேசிய தலைவர்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், பேசியதை அடுத்து நாடாளுமன்றத்தில் குழப்பம் நிலவியது . நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இப்படி தெரிவித்துள்ளார். இலங்கை நாடாளுமன்றத்தில் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா, தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் என்று சொல்லியிருந்தார். அப்போது இதனை மறுக்கும் வகையில் நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ”தேசிய தலைவர்” என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *