மின்சார ரெயிலில் சாகசம் செய்த பள்ளி மாணவி : வைரலாகும் வீடியோ – Dinaseithigal

மின்சார ரெயிலில் சாகசம் செய்த பள்ளி மாணவி : வைரலாகும் வீடியோ

கவரப்பேட்டை இருந்து ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார ரெயில் புறப்பட்டு மெதுவாக நகரவும், பள்ளி மாணவி ரெயில் படிக்கட்டில் உள்ள கம்பியை பிடித்தபடி சிறிது தூரம் நடைமேடையில் ஓடி வந்து பின்னர் துள்ளிக் குதித்து ரெயிலில் ஏறுகிறார். பின்னர் அதே வேகத்தில் ரெயில் படிக்கட்டில் தொங்கியபடி தனது ஒரு காலை நடைமேடையில் உரசிய படி சாகச பயணம் செய்கிறார். அதை தொடர்ந்து மாணவர் ஒருவரும் சாகச பயணம் மேற்கொள்கிறார். மாணவர்களுக்கு நிகராக பள்ளி மாணவியின் இந்த சாகசம் அங்கிருந்த பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலானதால் இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *