2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 66 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா – Dinaseithigal

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 66 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா

கர்நாடக மாநிலம் தர்வாத் மாவட்டத்தில் உள்ள எஸ்டிஎம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் 66 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே ஒன்றுகூடி விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். பின்னர், சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்களில் சிலருக்கு தொற்று இருப்பது உறுதியானது. தொடர்ந்து, அவர்களுடன் இருந்த மற்ற மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *