குழந்தையுடன் நாடாளுமன்றத்தில் வரக்கூடாது என தடை விதித்ததற்கு பதிலடி கொடுத்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் – Dinaseithigal

குழந்தையுடன் நாடாளுமன்றத்தில் வரக்கூடாது என தடை விதித்ததற்கு பதிலடி கொடுத்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்

குழந்தையுடன் வருவோரை இனி நாடாளுமன்ற சபையில் அனுமதிக்க முடியாது என விதிக்கப்பட்ட தடைக்கு தொழிலாளர் கட்சி உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸி பதிலடி வழங்கியுள்ளார் . பிரிட்டன் நாட்டின் நாடாளுமன்ற அவை நிர்வாகிகள் தமக்கு அனுப்பிய மின் அஞ்சல் நகலை தமது டுவிட்டர் பக்கத்தில் இணைத்து பதிவிட்ட எம்.பி. ஸ்டெல்லா க்ரீஸி, கடுமையாக விமர்சித்திருக்கிறார் . பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையில் எனது மூன்று மாத மகனுடன் செல்ல முடியாதாம், சட்டத்தை சுட்டிக்காட்டுகிறார்கள், ஆயினும் அவர்களால் இதுவரை மாஸ்க் அணிவது தொடர்பில் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை என அவர் கொந்தளித்துள்ளார் . நேற்று முன் தினம் வாள்தாம்ஸ்டோவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸி தமது மூன்று மாத குழந்தையுடன் நாடாளுமன்ற சபைக்கு சென்றுள்ளார். இந்த நிலையிலேயே நாடாளுமன்ற விதிகளை சுட்டிக்காட்டி உறுப்பினர் ஸ்டெல்லா க்ரீஸிக்கு மின் அஞ்சல் அனுப்பி வைத்திருக்கிறார்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *